அத்துருகிரிய - பொரலுகொட வீதியில் முகமூடி அணிந்திருந்த கும்பல் ஒன்று இரண்டு மாடி வீடொன்றுக்குள் நுழைந்து தம்பதியை கத்தி முனையில் மிரட்டி 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிட்ட பொருட்களில் 13 பவுண் தங்க நகைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகமூடி அணிந்திருந்த கும்பல் ஒன்று சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் ஜன்னலை உடைத்துக்கொண்டு குறித்த வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த தம்பதியை கத்தி முனையில் மிரட்டி பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர் இது தொடர்பில் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.







.jpeg)





