பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த அடையாளம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !



கல்னேவ நகரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் ஒருவர் கல்னேவ அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (21) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 05 அடி உயரமுடைய, குறுகிய தலைமயிர் மற்றும் முகம் முழுவதும் லேசான தாடியுடன் இருப்பதாகவும், அவர் நீலம், கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் காற்சட்டை மற்றும் சட்டை அணிந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்னேவ நகரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் நபரொருவுர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 1990 ஆம்புலன்ஸ் சேவை ஊடாக கல்னேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதவானின் விசாரணைக்குப் பின்னர், சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.