ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல் !



2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவ்வமைச்சு, 2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் கல்விச் சேவை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்பட்டதுடன், அதற்குரிய ஆசிரியர் சம்பளம் இன்றைய தினம் கணக்குகளில் இடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.