தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் பட்டய பயிற்சி கற்கை நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



தமிழ் நாடு அரசினால், தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டய பயிற்சி கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (09) தமிழ் நாடு வர்த்தக மையத்தில் தமிழ் நாடு மான்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்விற்கு, தமிழ் நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் கௌரவ பழனிவேல் தியாகராஐன் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அயல்நாட்டு மாணவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில், இலங்கையில் இருந்து உயர் சர்வதேச கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் தலைமையில் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.