மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை - 75 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் பலி !



மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று மக்கள் குடியுருப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்த நிலையில் வீதியால் சென்றுகொண்டிருந்த யானை திடீரென மக்கள் மனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளது.

அதிகாலையில் முனைக்காடு மேற்கு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டில் தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த பெண்களை எதிர்கொண்டு தாக்கியதுடன் காட்டு யானை தாக்குதலில் 75 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் யானை தாக்கிய இடத்திலே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யானை மீண்டும் ஊருக்குள் புகும் என்ற அச்சத்தில் மக்கள் பொழுதை கடத்துகின்றனர்.
 
மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.