மட்டக்களப்பு மாநகரசபை எல்லையில் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்துமாறு வேண்டுகோள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)


மட்டக்களப்பு மாநகரசபை எல்லையினுல் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்துமாறு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் இன்று (26) வேண்டு கோள் விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த க.பொ.த. சாதாரன தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு ஓய்வினை வழங்கும் வகையில் அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை இரு வாரங்கள் தனியார் கல்வி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் கல்வி நிலையங்களின் சுகாதார வசதி மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்கு ஏற்றவகையில் காணப்படுவதை மாநகர சபையினால் உறுதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இவ் அறிவுருத்தலை கடைப்பிடிக்காத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக மாநகர சபை கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.