இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்



இந்த ஆண்டின் (2026) முதல் சந்திர கிரகணம் இன்று செவ்வாய்க்கிழமை (03) நிகழ்கிறது.

2026 ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தென்படும் ஒரேயொரு சந்திர கிரகணம் இன்று (03) நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 6:21 மணி முதல் இலங்கையர்கள் இந்தச் சந்திர கிரகணத்தை அவதானிக்க முடியும்.

இது ஒரு முழு சந்திர கிரகணமாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், இலங்கையில் உள்ள அவதானிப்பாளர்களுக்கு இது ஒரு பகுதி அளவு சந்திர கிரகணமாகவே தென்படும்.

மாலை 6:21 மணிக்கு சந்திரன் கிழக்குத் திசையில் உதிக்கும் போது, அதன் ஒரு பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படுவதை அவதானிக்க முடியும் என வானியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்