பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மருந்தக உரிமையாளரின் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 571 போதைமாத்திரைகளும் 11 கிராம் 760 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட மருந்தக உரிமையாளர் போதைப்பொருளுக்கு அடிமையானர் என வைத்திய பரிசோதனைகளில் வெளியாகியுள்ளது.
சந்தேக நபரான மருந்தக உரிமையாளர் தனது சகோதரனான வைத்தியரின் உதவியுடன் இந்த குற்றச் செயலை நீண்ட காலமாக செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருந்தக உரிமையாளருக்க உடந்தையாக இருந்த வைத்தியர் தொடர்பில் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் சிலாபம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)





.jpeg)


