மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!


மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கெப்ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், கெப்ரக வாகனமொன்றுடன் மோதியதில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு ஏறாவூர் 01 மற்றும் குடியரசு பகுதிகளைச் சேர்ந்த 17 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ். நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

கெப்ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.