மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து, சற்றுமுன்னர் குதித்த யுவதி, பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதையுடையவர் எனவும், கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












.jpeg)
