இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த சிறுவனின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதுடன், தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் மற்றும் அவரது சகோதரர்கள், தந்தையின் உறவினரான மாமனார் வீட்டிற்குச் சென்று தொலைபேசி மூலம் தந்தையுடன் தொடர்பு கொண்டு வந்துள்ளனர். இதற்காக, தந்தை மாதாந்தம் ரூ.30,000 பணத்தை மாமனார் ஊடாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி, மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த போது, குறித்த மாமனார் சிறுவனிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் மாமனார் வீட்டிற்கு சென்ற சந்தர்ப்பத்திலும், அதேபோன்ற செயலில் ஈடுபட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைப் பற்றி சிறுவன் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி 1990 அவசர சேவைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், பொலிஸார் சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்து, வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து தலைமறைவாக இருந்த சந்தேகநபரை தேடி வந்த பொலிஸார், நேற்று (20) அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.











.jpeg)

