சுங்கச் சட்ட மீறல் குற்றச்சாட்டு : House of Fashions உரிமையாளர் கைது


House of Fashions நிறுவனத்தின் உரிமையாளரும் நிர்வாக இயக்குநருமான ப்ரீதி ஜயவர்தன, சுங்கச் சட்ட மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க மதிப்பீடு (Customs Valuation) தொடர்பான விசேட விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது இல்லத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பின்னர், சுங்க அதிகாரிகளின் காவலில் இருந்தபோது அவருக்கு இதய நோய் தொடர்பான உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று அவரை பார்வையிட்ட பின்னர், ப்ரீதி ஜயவர்தனவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.