பொலிஸ் தகவல்களின்படி, பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் அமர்ந்திருந்தபோது, மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் சக காவலர் ஒருவர் வலுக்கட்டாயமாக அவரது மடியில் அமர்ந்து பாலியல் தொல்லை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சந்தேகநபர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவலரும் அதே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட காவலர் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் கடுமையான மது போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







.jpg)






