திடீர் சொத்துக் குவிப்பு , ஆடம்பர வாழ்க்கை குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் !



சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்புகள் தொடர்பான விசாரணைகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சமூகத்தின் நல்வாழ்வைக் கருத்திற்கொண்டு, இது போன்ற சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.