நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளது.
இன்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உயிர்நீத்த அதிகாரிகள் "கடமையில் உயிர்தியாகம் செய்த வீரர்கள்" எனப் போற்றப்பட்டுள்ளதுடன், அவர்களின் தியாகத்திற்கு திணைக்களம் தனது ஆழ்ந்த மரியாதையை தெரிவித்துள்ளது.
அதேவேளை, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த அதிகாரிகளின் பெயர்கள் வருமாறு:சார்ஜென்ட் ஆர்.பி.ஆர். சஞ்சீவ (R.P.R. Sanjeewa)
*சார்ஜென்ட் பி.என்.என். தரங்க (B.N.N. Tharanga)
*சார்ஜென்ட் டி.என்.ஆர். திலகசிறி (T.N.R. Thilakasiri)
*ஜெயிலர் எஸ்.எச்.ஜி. சந்திரவன்ஷ (S.H.G. Chandrawansha)
*சார்ஜென்ட் டி.டபிள்யூ. புஷ்பகுமார (D.W. Pushpakumara)
*சார்ஜென்ட் எஸ்.டி.எஸ். ஏபிவர்தன (S.D.S. Aebywardena)
*சார்ஜென்ட் ஏ.டி. தரங்க (A.D. Tharanga)
குறித்த அதிகாரிகள், கடந்த திங்கட்கிழமை (06) நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.







.jpg)


.jpg)


.jpg)
