பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தராக வடிவேல் பற்குணன் கடமையேற்பு


செங்கலடி, ஏறாவூர்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரும், அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரும், அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய வடிவேல் பற்குணன் அவர்கள், நிர்வாக உத்தியோகத்தராக இன்று (06.07.2026) வலயக் கல்வி அலுவலகம் பட்டிருப்பில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சேவையின் அதி விசேட தரத்திற்கான பரீட்சையில் சித்திபெற்ற இவருக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் இந்த நிர்வாக உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

 மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கடமையேற்பு நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் இபிரதி கல்விப் பணிப்பாளர்கள் , கணக்காளர் , ஆசிரியர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பழைய மாணவரான திரு. வடிவேல் பற்குணன்  , தனது நீண்டகால சேவைப் பயணத்தில் பல்வேறு முக்கிய திணைக்களங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார். அந்தவகையில்: மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களம் இமட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகம்இபட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம்இசெங்கலடி நீர்ப்பாசனத் திணைக்களம்இசெங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச சபை, போன்ற அரச அலுவலகங்களில் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.

குறிப்பாக, அவர் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதி உதவியுடன், பொது அமைப்புகள் மற்றும் ஏனைய திணைக்களங்களை ஒருங்கிணைத்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

அவரது வழிகாட்டலில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பாதைகள் புனரமைப்பு, பொதுச் சந்தைகள் மற்றும் வணிக நிலையங்களின் சீரமைப்பு உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு வசதிகளும், மக்களின் அடிப்படைத் தேவைகளும் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டிருந்தன என்பது நினைவுகூரத்தக்கது.

அனுபவம் மிக்க ஒரு அதிகாரி பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையேற்றுள்ளமை, அவ்வலுவலகத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.