மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை : ஐவர் கைது!



சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்ட போது, 4 பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, குறித்த விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த முகாமையாளர் மற்றும் விபச்சார தொழிலுக்காகத் தங்கியிருந்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹதுந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகாமையாளர் மற்றும் கொஸ்கம, மாத்தளை, குருநாகல் மற்றும் அம்பகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 30 வயதிற்குட்பட்ட 4 பெண்கள் ஆவார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சீதுவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.