
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, வாத்துவ பகுதியில் உள்ள வங்கிக் கிளை ஒன்றின் ஏடிஎம் இயந்திரத்துக்கு அருகில் விமானப்படை அதிகாரி ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாத்துவ பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் 22ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இதன் பலனாக, நேற்று புதன்கிழமை (01) குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடிகமுவ, பிடுகல்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்றையவர், அட்டால பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைதான இருவரும் இன்று வியாழக்கிழமை (2) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








.jpg)
.png)
.jpg)


