2026 ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் மின்கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு




2026 ஆம் ஆண்டின் 3 ஆம் காலாண்டுக்கான மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மின்கட்டணத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், தற்போதைய மின்கட்டண கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின்சார உற்பத்தி செலவுகள், வருமானம், நுகர்வு நிலை மற்றும் மின்சாரத் துறையின் தற்போதைய நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2026ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையான 3 ஆம் காலாண்டு காலப்பகுதிக்கான மின்கட்டணங்களில் மாற்றம் இடம்பெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நுகர்வோர் நலன் மற்றும் மின்சார விநியோகத்தின் நிலைத்தன்மை ஆகியவை முக்கியமாக கருத்தில் கொள்ளப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.