சம்மாந்துறையில் காரில் மாடுகளைக் கடத்திய கும்பல்: காருடன் மாடுகள் மீட்பு – இருவர் தப்பியோட்டம்

(பாறுக் ஷிஹான்)

 
சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாடுகளைத் திருடி, காரில் கடத்திச் சென்று இறைச்சியாக விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்ய சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் திங்கட்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் மற்றும் அதிலிருந்த மாடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இருவரையும் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.