
(செ. திவாகரன்)
ஹட்டன்-டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில் தொடர் குடியிருப்பில் இன்று (26) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் பரவிய தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடமைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.








.jpg)



