
வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது தலைமறைவாகியிருந்த நிலையில், அவருக்கு எதிராக வெலிசறை நீதவான் நீதிமன்றத்தினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ராகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிங்கெந்த பகுதியில் வைத்து சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவராவார்.
சந்தேகநபர் இன்று (05) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












