இந்தியா, இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே இலங்கைக்கு கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்பிலான 19.8 கிலோ 'ஹஷீஷ்' போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பாக ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை உட்கோட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கப் பொலிஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காக ஹஷீஷ் போதைப்பொருள் பதுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.பட்டினம் பொலிஸ் ஆய்வாளருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பொலிஸ் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படைப் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு சம்பவ இடத்திற்குச் சென்று தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்துச் சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 2 கிலோ ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிடிபட்ட நபரிடம் பொலஸார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது வீட்டில் மேலும் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரது வீட்டிற்குச் சென்று சோதனையிட்டதில், அங்கிருந்து 17.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கடற்கரை மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனைகளில் மொத்தம் 19.8 கிலோ ஹஷீஷ் (கஞ்சா செடியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிசின் போன்ற போதைப்பொருள்) பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர் திருவாடானை தளிர் மருங்கூர் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைவர் என தெரியவந்தது.
இவர் மீது ஏற்கனவே அந்நாட்டின் தொண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் பொலிஸ் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, எஸ்.பி.பட்டினம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முந்தைய 15 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் நீண்டநாட்களாகத் தலைமறைவாக இருந்து வந்தார். தற்போது மீண்டும் பெருமளவு போதைப்பொருளுடன் சிக்கிய அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பின்னணி மற்றும் மூலாதாரம் , இலங்கைக்குக் கடத்தத் திட்டமிடப்பட்ட வழிமுறைகள், இக்கடத்தலுக்கு உதவிய நபர்கள் மற்றும் சர்வதேச கடத்தல் தொடர்புகள் ஆகியவை குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலோரப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, தலைமறைவுக் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.