குடும்பத் தகராறு முற்றியதால் சாலியவெவ, கும்புக்ஃகல்ல பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (03) இக்கொலை தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் சாலியவெவ பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கும்புக்ஃகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஆவர்.
குடும்பத் தகராறு முற்றியதால் கணவரால் இக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் கணவர் தற்போது அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சடலம் மீதான நீதவான் பரிசோதனையின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை உடனே கைது செய்வதற்குச் சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.