
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுவாடிய பாலத்திற்கு அருகில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் 03 திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதற்கு கொண்டு செல்லத் தயார் படுத்தப்பட்டிருந்த 'கோடா'வுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல் சோதனை நடவடிக்கையின் போது, 900 லீற்றர் 'கோடா'வுடன் (05 பீப்பாய்கள்) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் சோதனை நடவடிக்கையின் போது 945 லீற்றர் 'கோடா'வுடன் (05 பீப்பாய்கள்) ஒருவரும் மூன்றாம் சோதனை நடவடிக்கையின் போது 1,890 லீற்றர் 'கோடா'வுடன் (10 பீப்பாய்கள்) ஒருவரும் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மினுவாங்கொடை, ஹீனட்டியான பகுதியைச் சேர்ந்த 25, 37 மற்றும் 57 வயதுடையவர்களாவர்.
மேலும், மொத்தமாக 3,735 லீற்றர் (20 பீப்பாய்கள்) சட்டவிரோத 'கோடா' கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












