கண்டி ஹசலக்கவில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 57 வயது நபர் கைது!



கண்டி, ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகஹவெல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) சட்டவிரோதமான முறையில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹசலக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தம்பகஹவெல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் ஹஸலக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.