இலங்கையில் 6 மாதங்களில் 8.71 இலட்சம் டிக்டாக் காணொளிகள் நீக்கம் – டிக்டாக் நிறுவனம் தகவல்!



இதில் முதல் காலாண்டில் 441,089 காணொளிகளும், இரண்டாம் காலாண்டில் (Q2) 430,357 காணொளிகளும் அடங்கும். இதற்கமைய, முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் நீக்கப்பட்ட காணொளிகளின் எண்ணிக்கையில் 10,732 (சுமார் 2.4%) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கையிலிருந்து நீக்கப்பட்ட காணொளிகள் குறித்த தனித்துவமான வகைப்பாட்டை டிக்டாக் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், உலகளாவிய ரீதியில் நீக்கப்பட்ட காணொளிகளின் வகைப்பாடு பின்வருமாறு அமைந்திருந்தது:

19.5% – உணர்வுபூர்வமான அல்லது முதிர்ந்தோர் சார்ந்த உள்ளடக்கங்கள்

16.1% – மன மற்றும் நடத்தை சுகாதாரம் தொடர்பான உள்ளடக்கங்கள்.

13.8% – உடல் வெளிப்பாடு மற்றும் பாலின நடத்தைகள்.

13.7% – பாதுகாப்பு மற்றும் நாகரிக தரநிலைகளை மீறுதல்.

13.5% – அபாயகரமான செயற்பாடுகள் மற்றும் சவால்கள்.

1.8% – தள விவாதங்களை மீறி திருத்தப்பட்ட ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள்.

நீக்கப்பட்ட காணொளிகளில் முதல் காலாண்டில் 20,051 காணொளிகளும், இரண்டாம் காலாண்டில் 12,960 காணொளிகளும் மேன்முறையீடுகளுக்குப் பின்னர் மீண்டும் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி ஆறு மாதகாலத்தில் மொத்தம் 33,011 காணொளிகள் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் இரண்டாம் காலாண்டில் நீக்கப்பட்ட காணொளிகளில் 99.4% காணொளிகள் பயனர்கள் புகார் அளிப்பதற்கு முன்னரே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. (முதல் காலாண்டில் இது 99.1%ஆக இருந்தது)

இருப்பினும், கண்டறியப்பட்ட 24 மணிநேரத்துக்குள் நீக்கப்பட்ட காணொளிகளின் வீதம் 95%இல் இருந்து 93.9%ஆகச் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இரு காலாண்டுகளிலும் இலங்கையில் வெளியிடப்பட்ட காணொளிகளில் நீக்கல் வீதம் 0.5%ஆக நிலவியுள்ளது.

உலகளாவிய ரீதியில் இரண்டாம் காலாண்டில் மட்டும் சுமார் 188.3 மில்லியன் காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதில் செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு உட்பட தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலம் 97.4% நீக்கல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் டிக்டாக் தெரிவித்துள்ளது.

மேலும், அதே காலப்பகுதியில் உலகளவில் 278.4 மில்லியன் கருத்துக்கள், 146.8 மில்லியன் போலிக் கணக்குகள் மற்றும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கணக்குகள் என சந்தேகிக்கப்படும் 26.8 மில்லியன் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.