
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதி நீரோடையில் நபரொருவர் தவறி விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வயலில் விவசாய வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு உணவு கொண்டுசென்றபோதே அந்த நபர் நீரோடையில் தவறி விழுந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தவறி விழுந்த நபர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் ஓட்டமாவடி 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.












