தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் 9 விசேட விடுமுறை!



மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறைக்கு பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.