நீர்கொழும்பில் பிரமிட் நிதி மோசடி தொடர்பில் இருவர் கைது!



பிரமிட் முறை நிதி நிறுவனம் ஒன்றை நடத்துதல், ஊக்குவித்தல்,விளம்பரப்படுத்துதல், நிதியளித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அதன்படி நேற்று (3) நீர்க கொழும்பு பகுதியில் வைத்து,இந்தப் பணம் மோசடியுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 45 மற்றும் 59 வயதுடையவர்கள் என்பதுடன்,திம்பிரிகஸ்கட்டுவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச்
சேர்ந்தவர்களாவர்.

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.