
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு வழக்கு விசாரணைகளின் முடிவில், ஏற்கனவே வழங்கப்பட்ட நியமனத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் பதவி நியமன விடயத்தை தடுத்து நிறுத்துகின்ற வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரீட் மனு மீதான விசாரணை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (05) விசாரணைக்கு பின்னர் தீர்ப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவிக்காக விண்ணப்பித்த தகுதியுடைய விண்ணப்பதாரர் ஒருவரினால் இம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் இவ்வழக்கில் கிழக்கு மாகாண ஆளுநர், தவிசாளர்,பொது சேவை ஆணைக்குழு மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் 15 பேர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டிருந்தனர்.
இதன் போது கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவிக்காக மேற்கொள்ளப்பட்ட நியமனம் சட்டமுரணானது என அறிவித்துள்ள நீதிமன்றம் அப் பதவிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நியமனத்தை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.குறித்த பதவிக்காக நடத்தப்பட்ட முந்தைய நேர்காணல்கள் மற்றும் அதன் மூலமான மதிப்பீடுகள் அனைத்தும் செல்லுபடியற்றவை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வுகளை நடத்தும் போது, இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத உயர்கல்விச் சான்றிதழ்களுக்குப் புள்ளிகள் வழங்குவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.உறுதிப்படுத்தப்படாத (Unverified) உயர்கல்வி சான்றிதழ்களுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுத் திட்டத்திற்கு (Approved Marking Scheme) அமைவாக தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் புதிய நேர்காணலை நடத்தி எதிர்காலத்தில் இடம்பெறும் நேர்முகப் பரீட்சைகளின்போது முறையாகச் சரிபார்க்கப்பட்ட பட்டச் சான்றிதழ்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சரிபார்க்கப்படாத சான்றிதழ்களின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கவோ, அவற்றைத் தகைமைகளாகக் கருதவோ கூடாதுஅதில் அதிக புள்ளிகளைப் பெறும் தகுதியானவரைப் பணிப்பாளராக நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கடந்த தவணையின் போது குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும் நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் என்பவர் சார்பாக ஆஜரான சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், தவிசாளர்,பொது சேவை ஆணைக்குழு உட்பட 15 பேர் கொண்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் வாதப் பிரதிவாதங்களை அடுத்து இரு தரப்பினரின் எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்யுமாறும் பணிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை (05) குறித்த வழக்கு தீர்ப்பிற்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த பதவி நியமன விவகாரம் தொடர்பில் மனுதாரரின் வழக்கினை ஆதரித்து சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் ஆஜராகி இருந்தார்.குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும் நியமனத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் என்பவர் தனக்கு எதிரான அநீதியை கேள்விக்குட்படுத்தி சட்டத்தரணி ஊடாக கல்முனை மேல் நீதிமன்றம் ஊடாக ரீட் மனு தாக்கல் செய்திருந்தார்.இவர் இம்மனுவில் கிழக்கு மாகாண ஆளுநர், தவிசாளர்,பொது சேவை ஆணைக்குழு உட்பட 15 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த 2025 ஆண்டு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளரை தெரிவு செய்வதற்கு குறித்த நேர்முக பரீட்சை நடாத்தப்பட்டிருந்தது.இதன்போது மனுதாரரான அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் என்பவர் நேர்முக பரீட்சை மற்றும் பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கு வழங்கப்பட்ட புள்ளிகள் விடயத்திலும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத (Unverified) உயர்கல்வி சான்றிதழ்களுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளதுடன் நேர்முக பரீட்சையின் போது மதிப்பெண் வழங்கப்பட்ட மதிப்பெண் தாளில் உரிய தகைமை நிலையில் இருந்த தகைமையற்ற நிலையில் இருந்தவருக்கு மோசடியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












