இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், 'அபயம்' அமைப்பின் ஏற்பாட்டில் விசேட கல்வி கருத்தரங்கு ஒன்று மட்டக்களப்பு தளவாய் பகுதியில் அமைந்துள்ள அபயம் கல்வி மையத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளைக் கணிசமான அளவு அதிகரிக்கும் நோக்கிலும், பொருளாதார மற்றும் கல்வி வசதி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் வகையிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்தரங்கில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளதுடன், கல்விச் சமூகத்தினரும் அபயம் அமைப்பின் இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.















