
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (03) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பாராளுமன்றத்தின் செங்கோலை கைப்பற்ற முயற்சித்ததால் சபையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
44 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பங்களுடன், சபாநாயகருக்கு எதிரான 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்












