காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்புக்கு நீதி கோரி காலி முகத்திடலில் கவனயீர்ப்புப் போராட்டம்!




காவந்திஸ்ஸ யானை உயிரிழந்தமை தொடர்பில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பு காலி முகத்திடலில் இன்று செவ்வாய்க்கிழமை (3) கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

காவந்திஸ்ஸ யானை படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதனை மறந்துவிட்டபோதிலும், நாட்டின் பொதுமக்கள் அதனை ஒருபோதும் மறக்கவில்லை என இதன்போது போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.