களனிப் பல்கலைக்கழகப் பெண் மாணவியர் விடுதியில் அமைந்துள்ள அறை ஒன்றில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால், குறித்தறையில் தங்கியிருந்த மாணவிகளின் அனைத்து உடைமைகளும் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த அறையில் மாணவிகள் எவரும் இருக்கவில்லை என்பதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன் எந்தவிதமான காயங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ பதிவாகவில்லை.
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.