கம்பளையில் கடையின் கூரை வழியாகத் திருட முயன்ற நபர் கைது!



கம்பளை - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையமொன்றில் நள்ளிரவு வேளையில் திருடும் நோக்கில் நபரொருவர் கடையின் கூரைமீது ஏறித் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வியாபார நிலையத்திற்குள் நுழைவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியின்போது எழுப்பிய சத்தத்தைக் கேட்டு, அருகிலிருந்த மக்கள் விழிப்படைந்துள்ளனர்.

இதன்போது, நிலைமையைப் புரிந்துகொண்ட பொதுமக்களும் வியாபார நிலையத்தின் உரிமையாளரும் இணைந்து உடனடியாகச் செயற்பட்டு, கம்பளைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதற்கமைய, துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கம்பளைப் பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.