துலாம் - 2012 சித்திரை புது வருட ராசி பலன்

துலாம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய.

புத்தாண்டு ஆரம்பத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பண நடமாட்டம் அதிகமாகும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். குடும்ப நலம் சீராகும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள்.

 கலைத்துறை ஊக்கம் தரும். எதிர்பாராத திடீர்ப் பொருள்வரவு உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம் தொழில் அதிபர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். அரசாங்கப் பணிகள் நிறைவேறும். மே 17 முதல் குரு 8-ஆமிடம் மாறி கேதுவுடன் கூடுவது சிறப்பாகாது. மனதில் ஏதேனும் பயம் உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். மயக்கம் மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட நேரலாம். மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் மன அமைதி கெடும்.ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். ஆசைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஜன்மச் சனியால் வேலைப்பளு கூடும். அலைச்சலைத் தவிர்க்க முடியாமல் போகும். ஆகஸ்ட் 4 முதல் சனி நேர்கதியில் ஜன்ம ராசியில் உலவத் தொடங்குவதால் உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். நெருங்கிய நண்பர்கள் உதவி புரிவார்கள். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். இந்த புத்தாண்டு முழுவதும் ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் புதியவர்களிடம் விழிப்புத் தேவை. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலமிராது. விஷ பயம் ஏற்படும். கெட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். ஜலப்பயணத்தின்போதும், டிசம்பர் 23-க்கு மேல் ஆகாயப் பயணத்தின்போதும் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. அனுசரித்துப் போவது நல்லது. கூட்டாளிகளிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். யாரிடத்திலும் சுமுகமாகப் பேசிப் பழகுவதன் மூலம் சங்கடங்களைப் பெருமளவுக்குக் குறைத்துக் கொள்ளலாம். ஜனனகால ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்பட தேவையில்லை. பரிகாரம்: துர்கை, விநாயகர் வழிபாடு அவசியமாகும். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடவும். மே 17 முதல் குருவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும்.