வெள்ளம் வடிந்த நிலையில் பசிக்காக விறகை சுமந்து நகருக்குப் படையெடுக்கும் மக்கள்

(மா.சசி)
மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ளத்தினால் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டு உணவிற்கான சாமான்களோ சாமான்களைக் கொள்வனவு செய்வதற்கான பணமோ இன்றிக் கஸ்ரப்பட்ட மக்கள் வெள்ளம் வடிந்துகொண்டிருக்கையில் இன்று காலை மட்டக்களப்பு நகர் நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளனர். வவுணதீவு வலையிறவு பால வீதியால் நீர் வடிந்துகொண்டிருக்கையில் ஒரு இடத்தால் உடைப்பெடு த்துள்ளதால் இன்றும் சிறுவர் நிதியத்தின் வவுணதீவு அபிவிருத்தி அமைப்பு இயந்திரப் படகுச் சேவையினை நடாத்தி வருகின்றது. உணவுப் பொருட்களோ பொருட்களைப் பெறுவதற்கு பணமோ இன்றிக் கஸ்ரப்பட்ட மக்கள் வயிற்றுப் பசிக்கான உணவிற்கான கஸ்ரப்படும் நிலைகாணப்படுகின்ற நிலையில் வவுணதீவில் உள்ள மக்கள் துவிச்சக்கர வண்டியில் விறகு விற்க வந்த நிலையில் துவிச்சக்கர வண்டியுடன் விறகை சுமந்து தவெள்ளத்தைக் கடப்பதனையும் படங்களில் காணலாம்