வாழைச்சேனை நகரை அதிர வைத்த காட்டு யானைகளின் அட்டகாசம் - ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம் !


மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் ஊடுருவியது.

இதன்போது வாழைச்சேனை நகரில் ஊடுருவிய போது இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டி காட்டுயானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கிராமத்திற்குள் நுழைந்த 2 காட்டுயானைகள் மேற்கொண்ட தாக்குதலில் மொத்தமாக 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.