இங்கிலாந்து பல்கலைகழகத்தின் உதவியுடன் அம்பலாந்துறையில் புதிய பாலர் பாடசாலைக் கட்டடம்

இங்கிலாந்தின் எடின்பரோ பல்கலைகழகத்தின் உதவியுடன் அம்பலாந்துறை வடக்கில் புதிய பாலர் பாடசாலைக்கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் 11 மணிக்கு கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்காக ஓதுக்கப்பட்ட காணியில் இன்று நடைபெற்றது.

அம்பலாந்துறை வடக்கில் இன்றுவரை பாலர் பாடசாலைக்கான கட்டடம் பல வருட தேவையாக காணப்பட்டது இதன் பயனாக இங்கிலாந்தின் எடின்பரோ பல்கலைகழக மாணவர்களினால் அடிப்படை கல்விக்கான கட்டடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது இதற்காக இங்கிலாந்தின் எடின்பரோ பல்கலைகழகத்திலிருந்து 8 மானவ மானவியர்கள் வருகை தந்து இச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் இக்கட்டடம் இவ்விடத்தில் அமைக்கப்படுவதற்கு பாலமாக மட்டக்களப்பு பகுதியில் கல்வியை மையமாக கொண்டு பல பாலர் பாடசாலைகளை நடாத்தி வரும் ஓசன் ஸ்ரார் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.இவ்வைபவத்தில் உரையாற்றிய கிராமிய அபிவிருத்தி சங்கத்தலைவர் கிராம சேவை உத்தியேகத்தர் மற்றும் சிவில் பாதுகாப்பு தலைவர் பல வருட காலமாக தேவையாக காணப்பட்ட பாலர் பாடசாலை கட்டடத்தினை அமைப்பதற்கு இங்கிலாந்தின் எடின்பரோ பல்கலைகழகம் முன்வந்துள்ளமை வரவேற்க தக்கது எனவும் இச் செயற் திட்டத்தினை செவ்வனே நிறைவு செய்ய மக்கள் தமது முழு ஒத்துழைப்பினை வழங்கும் படியும் மக்களை கேட்டுக் கொண்டதுடன் தம்மால் முடிந்த சகல உதவிகளை செய்ய தமது முழு ஆதரவும் இருக்குமென கூறிச் சென்றனர்.

இக்கட்டடத்திற்கான அடிக்கல்லை இங்கிலாந்தின் எடின்பரோ பல்கலைகழகத்தின் மாணவாகளில் இருவர் திரு.அன்று செல்வி.எமிலி உட்பட ஓசன் ஸ்ரார் அமைப்பின் தலைவர் திரு.த.தர்மரஞ்சன் கிராமசேவையாளர் திரு. கருனாநிதி சிவில் பாதுகாப்பு தலைவர் திரு.கணபதிப்பிள்ளை இக்காணியினை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்காக இனாமாக வழங்கிய திரு. சின்னராசா கிராமிய அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.சிவதர்சன் கலைக்கழகம் சார்பாக திரு.தில்லைவாசன் மற்றும் கோவில் தலைவர் திரு.விஐயரத்தினம் என்போர் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தனர்.