களுவாஞ்சிக்குடி பிரதேச உணவக உரிமையாளர்களுக்கு; உணவு கையாளல் தொடர்பான கருத்தரங்கு.

( ரவிப்ரியா )
களுவாஞ்சிக்குடி பிரதேச உணவு கையாளும் நிறுவன உரிமையாளர்களிற்கான உணவுப் பாதுகாப்பும் உணவுச் சுகாதாரமும் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு  அண்மையில்
களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இவ் கருத்தரங்கில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.ஜெயரஞ்சன், களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன், கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் கே.குபேரன், குறுமண்வெளி பொது சுகாதார பரிசோதகர் வே.கணேசன் ஆகியோரினால் எதிர்காலத்தில் உணவு கையாளும் நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவது சம்பந்தமாகவும் உணவு கையாளுபவர்களின் சுகநல மருத்துவ சான்றிதழ் பெறுதலின் அவசியம் தொடர்பாகவும் உணவுச்சட்டங்கள் பற்றியும் கருத்துக்கள் வழங்கப்பட்டது.

அத்துடன் உணவு கையாள்பவர்களிற்குரிய அடிப்படைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இவ் கருத்தரங்கில் 32 உணவு தயாரிக்கும் கடைகளின் உரிமையாளர்கள் பங்குபற்றியதுடன் அவர்களது கடைகளில் கடமை புரியும் ஊழியர்களுக்கும் எதிர்வரும் தினங்களில் இதேபோன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்தார்.