அக்கரைப்பற்றில் இடம்பெற்ற, வன்முறையற்ற தொடர்பாடலுக்கான பயிற்சிக் கருத்தரங்கு

(ஏ.ஜி.ஏ.கபூர், (எம்.ஏ.றமீஸ்)
வன்முறையற்ற தொடர்பாடலுக்கான 02 நாள் பயிற்சி நெறியொன்று நேற்று முன்தினம் 14 திகதி வெள்ளிக்கிழமை, 15ம் திகதி சனிக்கிழமை ஆகிய தினங்களில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை ருவிஷன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பயிற்சி நெறி அமைப்பின் உப தலைவரும் சுனாமி சம்பந்தமான மத்தியஸ்த சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல்.கே.முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு தொடர்பாடலுக்கான மத்திய பயிற்சி நிலையத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற இப் பயிற்சி நெறியில் கொழும்பு தொடர்பாடலுக்கான மத்திய பயிற்சி நிலையத்தின் சிரேஸ்ட வளவாளர்களான பி.பெனிக்நஸ், எம்.பஸால், பி.ரமணிஷா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளைச் சிறப்பாக நடாத்தினார்கள்
ஐந்து படிமுறைகளைக் கொண்ட இப் பயிற்சி நெறியின் முதலாவது 02நாள் பயிற்சி நெறியில் அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை, திருக்கோவில் ஆகிய மத்தியஸ்த சபையின் தலைவர் உட்பட தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தெரிவு செய்யப்பட்ட சமுக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் ஆகியோருடன் கல்முனை பௌத்த விகாரையின் அதிபர் வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் முதலியோர்கள் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி நெறியினை அட்டாளைச்சேனை ருவிஷன் அமைப்பின் உப தலைவருமான ஏ.எல்.கே.முஹம்மத் அவர்களுடன் இணைந்து அதன் அமைப்பாளர்களான ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.ரவூப், மௌலவி ஏ.எம்.ரம்ஸி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.