களுவாஞ்சிக்குடியில் மத்திய வங்கியின் விழிப்பூட்டல் கருத்தரங்கு.

( ரவிப்ரியா )
இலங்கை மத்திய வங்கி களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்களன்ற பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம்
தலைமையில், அதிகாரமளிக்கப்படாத நிதி நிறவனங்களில் பணத்தை முதலீடு செய்வதால் ஏற்படும் விழைவுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கை நடாத்தியது.

இக் கருத்தரங்கில், மத்திய வங்கி சிரேஸ்ட உதவிப் பணிப்பாளர் திருமதி தனுஷpயா விஜயசுந்தர , மற்றும் உதவிப் பணிப்பாளர் செல்வி.நளினி.சிவலிங்கம், மத்திய வங்கி பிராந்திய முகாமையாளர் திருமதி கார்த்திகா நிரோஜா ஆகியோர் இலங்கை மத்திய வங்கி சார்பாக கலந்து கொண்டு விரிவுரையாற்றினர்.

இக் கருத்தரங்கில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள், சமுhத்தி உத்தியோகத்தர்கள் என சுமார்; 200பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெட்ணம், நிருவாக உத்தியோகத்தர் தவேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.