மட்/சின்னவத்தை அ.த.க. பாடசாலையில் நேசக்கரத்தினால் கற்றல் உபகரணம் அன்பளிப்பு

 (சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப் பற்றுக் கோட்டம் மிகவும் பின்தங்கிய  பிரதேசமாகும். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். இக் கோட்டத்தில் 32 பாடசாலைகள் உண்டு. இவ்வாறான நிலையில் பின்தங்கிய பிரதேசத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நிலையினை உயர் நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் சுவிற்சலாந்து நாட்டின் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் ஒன்றியம் (பவிக்கோன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகநலன் நோக்கில் செயற்பட்டு வரும் நிறுவனமான பிறைட் பியூச்சர் ( Bright future)   நேசக்கரம் கற்றல் வழங்களை வழங்கி மாணவர்களுக்க உதவி வருகின்றது.
இந்த வகையில் போரதீவுப் பற்றுக் கோட்டப் பாடசாலைகளுக்கு பகிர்தளிக்க ஒரு தொகைப் புத்தகப் பைகளையும், சிறுவர்களுக்கான குடைகளையும் அன்பளிப்புச் செய்திருந்தது. இவ் அன்பளிப்புப் பொருட்களை வழங்கும் நிகழ்வு மட்/சின்னவத்தை அ.த.க.பாடசாலை வித்தியாலத்தில் இன்று (24.04.2014) அதிபர் திரு எஸ்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக்  கல்விப் பணிப்பாளர் திரு.மா.உலககேஸ்பரம் அவர்களும் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன்; அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்