மட்டக்களப்பு நகரில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட வீதியோரங்களில் விற்பனை செய்யும்போது கைப்பற்றப்பட்ட வியாபாரிகளின் பொருட்களை மாநகர சபையினர் இன்று புதன்கிழமை (24) கையளித்தனர்.
வியாபாரத்தில் ஈடுபட்ட 3 வியாபாரிகளுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வு பின்பு மன்னிப்பின் கீழ் பொருட்களை கையளித்ததாக மநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
நகரில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் மாநகரசபை சட்டத்தின் 159 ஆம் பிரிவின் கீழ் 27.02.2004 வர்த்தமானி அறிவித்தலுக்கமைய நகரில் 13 வீதிகளில் வியாபாரம் தடை செய்துள்ள அறிவித்தல் அவர்களுக்கு வழங்கப்பட்டும் அவர்கள் மீண்டும் மீண்டும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வியாபாரிகளின் கழிவுப் பொருட்களை வாவி மற்றும் கான்களில் வீசுதல் போன்ற நடவடிக்கையினால் வாவி, கான்கள் மற்றும் உல்லாசப் பிரையாணிகள் நாடிவரும் இடங்கள் மாசடைவதாக அவர் மேலும் கூறினார்.
இவர்களுக்கு பழங்களைவிற்பனை செய்வதற்கு கல்லடி மீன் சந்தைக்கு எதிரேயுள்ள இடத்தில் ஒதுக்கிடப்பட்டுள்ளதனால் அங்கு வியாபாரத்தை தொடரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு மீண்டும் தொடர்ந்தால் நீதி மன்றில் கைப்பற்றும் பொருட்களை கையளிக்கவுள்ளதாகவும் வியாபாரிகளிடம் தெரிவித்தார்.







%20(1).jpg)




