சிறைக்கைதி ஒருவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழப்பு

நீதிமன்ற வளாகத்திலுள்ள மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று மாலை 3.20 அளவில் குறித்த கைதி, வழுக்கி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

விழுந்ததில் படுகாயமடைந்த கைதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தினை சேர்ந்த பரமானந்தமூர்த்தி சண்முகநாதன்(45வயது)எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.