மட்டக்களப்பில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிப் பட்டறை

மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான பயிற்றுவிக்கும் முறைமைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பகல் மட்டக்களப்பில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிறீன் கார்டன் விடுதியில் ஆரம்பமான இப் பயிற்சிப் பட்டறை இரண்டு நாட்கள் நடைறெவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், ஒக்ஸ்பார்ம் நிறுவனத்தின் இலங்கைக்காக பணிப்பாளர் ஆசாத் அகமட், திட்ட முகாமையாளர் எஸ்.ரகுராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அனுசரணையினை ஒக்ஸ்பார்ம் நிறுவனமும், பயிற்சிக் கற்கை நெறியினை நெசட் நிறுவனம் மேற்கொள்கிறது. வளவாளர்களாக டப்ளியூ.துமிந்த வீரசிங்க, எஸ்.பாலசுப்பிரமணியம், ஏ.சசிதரன், எஸ்.ரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமுதாயமட்ட அனர்த்த, ஆபத்துக் குறைப்பு நடவடிக்கைகளை உள்வாங்குவதன் ஊடாக சமூகத்தின் அனர்த்த மீள்திறனைக் கட்டியெழுப்புதல் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி நடைபெறுகிறது.
வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டமும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து மனிதாபிமான உதவி மற்றுமு; சிவில் பாதுகாப்புக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடள் இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய பயிற்சிநெறியில், மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அனர்த்து முகாமைத்துவப்பிரிவுகளின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.