
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், அக்கரைப்பற்று,திருக்கோவில்,பொத்துவில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.கேமந்த டிக்கோவிட்டவிடம் மகஜரொன்றை கையளித்தார். இம்மகஜரிலே மேற்படி விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மட்டக்களப்பு பிரதேசத்தில் பிறந்தவரும் தற்போது திருக்கோவில் வசிப்பவரும் முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஸ்பகுமார் என்ற இனியபாரதி, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த காலத்திலும் பின்னர், முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த காலத்திலும் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் கடத்திச் செல்லப்பட்ட எங்களது உறவுகளை மீட்டுத்தருங்கள், அவரால் பலவந்தமாக ஏழைகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட உடமைகள், சொத்துக்களை மீட்டுத்தாருங்கள், அவர் இருந்த காரியாலயம் அமைந்துள்ள வளாகத்தில் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களையும் அங்கு புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் தோண்டி எடுத்து நீதி விசாரணைகள் நடத்துங்கள், தற்போது அவர் வசிக்கின்ற திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு அருகிலுள்ள வீட்டில் பதுங்கு குழியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் நகைகள் பற்றிய விசாரணைகளை நடத்துங்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
'இப்போராட்டம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்பகட்ட போராட்டமாக இருப்பதுடன் தொடர்ந்து நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்' அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இதன்போது தெரிவித்தார். திருக்கோவில், தம்பிலுவில், ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம், பனங்காடு, வினாயகபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'பாரதியே நீ கடத்திச் சென்ற என் மகன் எங்;கே?'இ 'சீலன் பிடித்துச் சென்ற பிள்ளைகள் எங்கே?', 'அடக்கு முறையால் அழித்து விட்டீரே எம் மக்களை'இ 'அரசே? அடைத்து விடு பாரதியை சிறையில்' போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக ஆர்ப்பாட்டக்காரர்கள், மாகாணசபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதன்போது, பொலிஸ் அத்தியட்சகர், இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதியை பெற்றுத்தருவதாக்கவும் காணமல் போன உறவுகளிடம் வாக்குறுதி அழித்ததை அடுத்து ஆர்பாட்டக்காறர்கள் விலகிச் சென்றனர்.

