மட்டு. நகர உணவு விடு­தி­களில் திடீர் சோதனை

மட்­டக்­க­ளப்பு நகரின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் உள்ள உணவு விடு­திகள் நேற்று அதி­காலை பொதுச்­சு­கா­தார பரி­சோ­த­கர்­க­ளினால் திடீர் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன.

உணவு விடு­தி­களில் காலையில் விற்­ப­னை­செய்­யப்­படும் உண­வு­களின் தரம் தொடர்பில் பொது­மக்­க­ளினால் தெரி­விக்­கப்­பட்­டு­வரும் முறைப்­பா­டு­களை தொடர்ந்து இந்த சுற்­றி­வ­ளைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது.


 மட்­டக்­க­ளப்பு நகரின் கோட்­டை­முனை மற்றும் வெட்­டுக்­காடு பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­க­ளி­லேயே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டன.

மட்­டக்­க­ளப்பு பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் கா.ஜெய­ரஞ்­சனின் வழி­காட்­டலில் வெட்­டுக்­காடு பொதுச்­சு­கா­தார பிரிவு பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் எஸ்.அமு­த­மாலன் மற்றும் கோட்­டை­முனை பொதுச்­சு­கா­தார பிரிவு பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் ரி.சகா­ய­தே­வ­ராஜா ஆகி­யோரின் தலை­மையில் சென்ற பொதுச்­சு­கா­தார பரி­சோ­த­கர்கள் இந்த சோத­னை­களை மேற்­கொண்­டனர்.

 பழைய உண­வுப்­பொ­ருட்­களை குளி­ரூட்­டியில் வைத்து சூடாக்­கிய பின்னர் மீண்டும் காலை­வே­ளையில் சில உணவு விடு­திகள் விற்­பனை செய்­து­வ­ரு­வது இதன்­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெட்­டுக்­காடு பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் எஸ்.அமு­த­மாலன் தெரி­வித்தார்.

 இதன்­போது கோட்­டை­முனை பகு­தியில் இரண்டு உணவு விடு­தி­க­ளுக்கும் வெட்டுக்காடு பகுதியில் நான்கு உணவு விடுதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.