உடல் ஊனமுற்றோர் கலந்து கொண்ட நடனப் பயிற்சிப் பட்டறை

(சிவம்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள டல் ஊனமுற்றோர் கலந்து கொண்ட நடனப் பயிற்சிப் பட்டறை காந்திப் பூங்காவில் நேற்று இடம்பெற்றது.

கலை மற்றும் கல்வி என்பன அங்கவீனர்களை வலுவூட்டும் எனும் தலைப்பில் ஊனத்தோடு வாழ்பவர்களின் எதிர்ப்பகளை உடைத்தெறியும் நடனப் பயிற்சிப் பட்டறை விஸ் அபிலிட்டி நிறுவனத்தின் ஏற்'பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையில் வாழும் அங்கவீன குறைபாடு உள்ளவர்கள் முகம் கொடுக்கும் சவால்கள் சந்தர்ப்பங்களாக மாற்றியடைத்தலாகும்.

ஊனமுற்றோர் மற்றும் ஊனமற்றவர்கள் சமூகத்தில் எல்லோருக்கும் சம உரிமை பெற முயற்சி செய்தல், வேற்றுமைகளையும் பிரச்சினைகளையும் அகற்றுதல், கலை கல்வி மூலமாக ஊனத்தோடு வாழ்பவர்களை ஒன்று படச் சேவை செய்தல் என்பன நிறுவனத்தின் தொனிப்பொருளாக இருந்தது.

இதன்போது ஊனமுற்றோரின் உரிமைகள் மற்றும் அவர்களையும் சமூகத்தில் மதிக்க வேண்டும் எனும் விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிற்கு வழங்கப்பட்டன.


அனுராதபுரம், அம்பாரை, பொலன்நறுவை ஆகிய இடங்களில் இத்தகைய நடனப் பட்டறைகள் நடாத்திமை குறிப்பிடத்தக்கது.